ரயில் பெட்டியில் குண்டு வெடிப்பு
Related Articles
பாகிஸ்தானின் குவெட்டரில் இருந்து லாகூருக்கு பயணித்த ரயிலில் சிச்சாவட்னி என்ற இடத்தில் ஒரு ரயில் பெட்டியில் குண்டுவெடித்துள்ளது. குண்டுவெடிப்பில் ஒரு பெண் உட்பட்ட 2 பேர் பலியாகியுள்ளார்கள். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.