மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றவர்கள் கைது
Related Articles
தெஹிவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து மாவா கலந்த கஞ்சா விற்பனை செய்த இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
தெஹிவளை ரணஜய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கு தயாரிக்கப்பட்ட 13 கிலோ 25 கிராம் மாவா கலந்த கஞ்சா மற்றும் புகையிலை கலந்த கலவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மத்துகம மற்றும் தெஹிவளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.