உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான கலந்துரையாடல்
Related Articles
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று காலை 10.00 மணிக்கு தேர்தல் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இதன் போது, இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்புச் செயற்பாடுகள் மற்றும் வாக்களிப்பு நாள் வரையிலான செயற்பாடுகள் தொடர்பில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட உள்ளது.