கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம்
Related Articles
கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று கடவுச்சீட்டு வழங்குவதில் இடையூறு ஏற்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது.
நேற்றைய தினம் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு இன்று மதியம் 12 மணிக்குப் பின்னர் கடவுச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இன்று நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களுக்கு நாளைய தினம் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது
அத்துடன் இந்த வாரம் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பதிவு செய்துள்ளவர்கள் தாம் பதிவு செய்துள்ள நாளுக்கு, மறுநாள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளவர்களுக்காக எதிர்வரும் சனிக்கிழமை கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது