தெமட்டகொடவில் நேற்று (13) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 2 பாதுகாப்பு படையினரை பொரள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.