நியூசிலாந்தில் கேப்ரியல் புயல் கடற்கரையை நெருங்குவதால் சில இடங்களுக்கு தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக Auckland இலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிப்பவர்கள் அதிக கனமழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று போன்றவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும்
பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
கிழக்கு கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 46,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, சில பகுதிகளில் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேப்ரியல் புயல் வட தீவு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பெரும் கடல் சீற்றங்களை ஏற்படுத்துவதால், நியூசிலாந்து அரச வரலாற்றில் மூன்றாவது முறையாக தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
