2வது முறையாக நிலநடுக்கம்
Related Articles
இன்று காலை 6.47 மணியளவில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 135 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இதனை நிலநடுக்க அறிவியல் மையம் இன்று அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒரு மாதத்தில் 2வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.
கடந்த ஜனவரி 22ம் திகதி அந்நாட்டின் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 79 கி.மீ. தொலைவில் காலை 9.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.