பல ரயில் சேவைகள் ரத்து
Related Articles
வேலைநிறுத்தம் காரணமாக இன்று திட்டமிடப்பட்ட பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
என்ஜின் சாரதிகளின் தொழிற்சங்கத்தினால் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், பிரதான மற்றும் கடலோர ரயில் பாதைகளில் இன்று இயக்கப்படும் அலுவலக ரயில்கள் உட்பட பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக , பொல்கஹவெல – மருதானை, மஹவ – கொழும்பு கோட்டை வரையில் இயக்கப்படவிருந்த 2 ரயில்கள், ரம்புக்கனை – கொழும்பு கோட்டை மற்றும் குருநாகல் – கொழும்பு கோட்டையிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டிருந்த ரயில்களும், ஹிக்கடுவை – மருதானை, அளுத்கம – மருதானை மற்றும் களுத்துறை – மருதானை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் முன்னெடுக்கப்படவிருந்த 3 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திட்டமிடப்பட்ட ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பல பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.