மார்ச் 15ஆம் திகதிக்குள் பாடசாலை சீருடை
Related Articles
தரம் ஆறு முதல் பதின் மூன்று வரையான அனைத்து தரங்களின் பாடத்திட்டமும் அடுத்த வருடம் புதுப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், எட்டாம் தரத்தில் செயற்கை நுண்ணறிவு கற்பித்தலை ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குள் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.