துருக்கி-சிரியா நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது
Related Articles
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருபத்தெட்டாயிரத்தைத் தாண்டியுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இருப்பினும் இடிபாடுகளுக்குள் உயிருடன் இருப்பவர்கள் குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம் ஜேர்மன் மற்றும் அவுஸ்திரேலிய நிவாரணக் குழுக்கள் சனிக்கிழமை முதல் தமது தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்த தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்குண்டு இருப்பவர்களை மீட்க ஐ.நா.வின் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.
இதேவேளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக துருக்கி பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.