பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்
Related Articles
துருக்கியில் நேற்று ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, துருக்கியில் வாழும் இலங்கையர்களைப் பற்றி விசாரிப்பதற்கு அல்லது தகவல்களை வழங்குவதற்கு துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளிலும் 4300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், சிலர் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் வாழும் இலங்கையர்களைப் பற்றி விசாரிப்பதற்கு அல்லது தகவல்களை வழங்குவதற்கு 00903124271032 மற்றும் 00905344569498 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களை துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
துருக்கியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்த 15 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அங்காராவிலுள்ள இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.
துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் தேவைப்படும் பொதுமக்கள், துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மேற்படி அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.