பௌர்னமி தினத்தில் சட்டவிரோத மதுபான மற்றும் போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபட்ட சிலர் கைது..
Related Articles
நேற்றைய நவம் பௌர்னமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட மற்றும் போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுட்ட சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டன. அனுமதி பத்திரமின்றி போலி மதுபானங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து தீர்வை வரியின்றி கொண்டுவரப்பட்ட மதுபானங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான சந்தேக நபர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் வத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதோடு, அவருக்கு உதவி வழங்கிய பொலிஸ் கான்ஸ்டப்ல் ஒருவரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் கேகாலை பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராகம தேவத்தை வீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா, ஹேஷ், குஷ் போதை வில்லைகள் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 60 ஆயிரம் ரூபா பணமும், டிஜிட்டல் தராசு ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.