மகனால் தந்தை அடித்துக்கொலை..
Related Articles
நுவரெலியா கந்தப்பளை பகுதியில் மகன் ஒருவரால் தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. பூப்பனை மேல்பிரிவு தோட்டத்தில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 3 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய குமாரவேல் தியாகப்பிரகாஷ் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை பொல்லால் தாக்கி கொலை செய்ததாக அவரது மூத்த மகன் பொலிசாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவரை கந்தப்பளை பொலிசார் கைதுசெய்துள்ளனர். கொலை சம்பவம் தொடர்பில் அயல்வீட்டார் இருவரும் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கந்தப்பளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.