பெரும்போக நெற்கொள்வனவு முறையில் மாற்றம்
Related Articles
இம்முறை பெரும்போகத்தில் நெற்கொள்வனவை மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பெரும்போகத்திற்கான நெற்கொள்வனவு நெந் சந்தைப்படுத்தும் சபையால் முன்னெடுக்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக நெற்கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்முறை 66 ஆயிரம் மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நெல்லை அரிசியாக மாற்றி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குடும்பமொன்றுக்கு 5 கிலோ அரிசி வீதம் இரு மாதங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.