3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.. 9 பேர் மருத்துவமனையில்..
Related Articles
3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படைக்கு சொந்தமான மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்து காலி-கொழும்பு பிரதான வீதியில் பாணந்துறை நல்லுருவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
75வது சுதந்திர தின ஏற்பாடுகளில் பங்குபற்றுவதற்காக பயணித்த விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற இந்த பஸ்கள் இன்று காலை ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.