உள்ளூராட்சி சபைத் தேர்தல் விசேட வர்த்தமானி
Related Articles
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட விடயங்கள் உள்ளடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி, மார்ச் 9 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான விவரங்கள் உரிய வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
58 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.