யுத்த விமானங்களை அனுப்பும் தகவல் தொடர்பில் மறுப்பு தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி..
Related Articles
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் யுக்ரேனுக்கு எப்.16 ரக தாக்குதல் விமானத்தை அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளார். யுக்ரேன் ஜனாதிபதி வொளாடிமீர் ஷெலன்ஸ்கி கடந்த வாரம் சர்வதேச சமூகத்திடம் யுத்த உதவிகளை கோரியிருந்தார். இதன் கீழ் அதிகளவான நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக யுக்ரேனின் யுத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க விருப்பம் தெரிவித்திருந்தன. அமெரிக்காவும் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகளின் ஊடாக யுக்ரேனுக்கு ஒத்துழைப்பு வழங்க விருப்பம் தெரிவித்தது.
எவ்வாறெனினும் ஊடகவியலாளர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியிடம் எப் 16 ரக தாக்குதல் விமானங்களை யுக்ரேனுக்கு வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி எப் 16 ரக யுத்த விமானங்களை அனுப்பும் தகவல் தொடர்பில் மறுப்பு தெரிவித்துள்ளார்.