வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை இலக்காக கொண்ட பயிற்சிகள்
Related Articles
மாகாண சபைகளுடன் இணைந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை இலக்காக கொண்ட பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
விரைவில் டொலர்களை ஈட்டக்கூடிய துறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை காணப்படுகிறது. மே மாதம் 200 மில்லியன் டொலராக காணப்பட்ட வருமானம் ஜூன் மாதம் 476.5 மில்லியன் டொலராக அதிகரித்தது. இவ்வருடம் நிறைவடையும் போது 700, 800 , 900 மற்றும் ஒரு பில்லியன் டொலரை மாதம் ஒன்றில் பெற எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எமது நாடு பயிற்சிகளுக்கு விருப்பம் இல்லை. பயிற்சி வழங்கவும், பயிற்சிகளை பெறவும் விருப்பம் இல்லை. எனினும் தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்கு இளைஞர் யுவதிகளை பயிற்றுவிக்க திட்டமிடப்பட்டள்ளது. இதற்கு மகாண சபைகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதை நோக்காக கொண்டு குறித்த பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார வடமத்திய மாகாண ஆளுனர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.