அவதானத்தை ஏற்படுத்தும் டெங்கு
Related Articles
டெங்கு பரவல் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென சுகாதார திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. மேல்மாகாணத்தில்தான் அதிகளவில் பரவுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் 4387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மொத்த பதிவுகளில் 32.5 சதவீதமானவை மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொசுக்கள் பெருகாமல் சுற்றுப்புறத்தை பராமரிப்பது மக்களின் பொறுப்பு என சுகாதாரத்துறையினர் வலியுறுத்துகின்றனர்.
அதிக காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் டெங்கு நோயா என்பதை ரத்தப் பரிசோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும். இந்த நாட்களில் பரவி வரும் இன்புளுவன்ஸாவின் அறிகுறிகள் டெங்கு நோயின் அறிகுறிகளை ஒத்துள்ளதாக சுகாதார திணைக்களம் மேலும் வலியுறுத்துகிறது.