இரட்டை கொலையில் முடிவடைந்த நிலத்தகராறு
Related Articles
புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்குளம் பகுதியில் நேற்று (29) இரட்டைக் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நால்வரில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
புல்மோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 45 வயதுடையவர்களே கூரிய பொருட்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவரால் அரசுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருந்த மாட்டுத் தொழுவத்தை ஒருவர் அகற்ற முற்பட்டதை அடுத்து இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆனால், வாக்குவாதம் முற்றி இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு 4 பேர் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களில் இருவர் திருகோணமலை வைத்தியசாலையிலும், இருவர் புல்மோட்டை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.