யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி..
Related Articles
யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். யுக்ரேனுக்கு அதிநவீன யுத்த தாங்கிகளை வழங்கவுள்ளதாக அமெரிக்காவும், ஜேர்மனும் அறிவித்திருந்தன. குறித்த அறிவிப்பு வெளியாகி 24 மணிநேரத்திற்குள் யுக்ரேன் மீது ரஷ்யா தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதேவேளை மேற்குலக நாடுகள் யுக்ரேனுக்கு யுத்த தாங்கிகளை வழங்க எடுத்த தீர்மானம், போரில் நேரடியாக பங்கேற்பதற்கு சமன் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.