10 வருடங்களின் பின்னர் கடந்த பருவ காலத்தில் அதிகளவு நெல் அறுவடை பதிவு
Related Articles
விவசாயத் திணைக்களத்தின் தகவல்களின்படி, 10 வருடங்களின் பின்னர் கடந்த பருவ காலத்தில் நாட்டிலேயே அதிகளவு நெல் வயல்கள் மற்றும் அதிகளவு நெல் அறுவடை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நெற்செய்கையில் ஐந்து இலட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டேர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 3207 கிலோ நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக நெல் சாகுபடி முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.