தியவன்னா ஓயாவில் படகொன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல்போயுள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் ஊடறுத்துச்செல்லும் தியவன்னாஓயா பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாகும். அதில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவரில், ஒருவரே காணாமல்போயுள்ளார். படகு கவிழ்ந்தபோது மற்றையவர் நீந்தி கரை சேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இன்று அதிகாலை 02.00 மணியளவில் மீன்பிடிப்பதற்காக வந்ததாகவும், அதிகாலை 04.30 மணியளவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தியவன்னா ஓயாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் மாயம்..
படிக்க 0 நிமிடங்கள்