2022ம் ஆண்டின் சிறந்த T – 20 கிரிக்கெட் வீரருக்கான ICC விருதை இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் கைப்பற்றியுள்ளார். அவர் T – 20 வரலாற்றில் சிறப்பான சாதனையை படைத்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை பாராட்டியுள்ளது. கடந்த வருடம் 31 T – 20 போட்டிகளில் விளையாய சூரியகுமார் யாதவ் ஆயிரத்து 164 ஓட்டங்களை குவித்துள்ளார். ஒரு வருடத்தில் இந்திய வீரரொருவர் T – 20 போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களை எடுத்த முதற்சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது. சூரியகுமார் யாதவ் கடந்த வருடம் T – 20 போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைச்சதங்களையும் பதிவுசெய்துள்ளார். அவர் 68 சிக்ஸர்களையும் அடித்தமையும் குறிப்பிடத்தக்கது.
ICC விருது சூரியகுமார் வசம்..
படிக்க 1 நிமிடங்கள்