ஜேர்மனில் ரயில் பயணிகளை இலக்காக வைத்து கத்திக்குத்து தாக்கதல்..
Related Articles
ஜேர்மனில் ரயில் பயணிகளை இலக்காக வைத்து கத்திக்குத்து தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜேர்மனின் வட பகுதியில் ஓடும் ரயிலில் பயணிகள் தாக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
தாக்குதல் நடத்திய நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவருக்கு ஏதேனும் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து ஜேர்மன் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.