பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை..
Related Articles
பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் பெட்ரீசியா ஸ்கொட்லண்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். பெப்ரவரி 4ம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக பொதுச்செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. 5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வருகைத்தரும் பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் பெட்ரீசியா ஸ்கொட்லண்ட், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அவர் மேலும் பல முக்கிய சந்திப்புக்களையும் நடத்தவுள்ளதாக பொதுச்செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.