கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி பணிகளுக்கு தொடர்ந்தும் ஜப்பானிடமிருந்து ஒத்துழைப்பு
Related Articles
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நிர்மாணிப்பதற்கு ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கப்படுமென இலங்கைக்கான, ஜப்பான் தூதுவர் மிஸுகோஷி ஹிதேகி தெரிவித்துள்ளார். ஜப்பான் தூதுவருக்கும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்குமிடையிலான விசேட பேச்சுவார்த்தை துறைமுகம், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இடம்பெற்றது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பிலும் அமைச்சர் அதன்போது நன்றி தெரிவித்தார். ஜப்பான் அரசாங்கத்தின் தலையீட்டுடன் ஜெய்க்கா நிறுவனம் கட்டுநாயக்க விமான நிலைய இரண்டாம் கட்ட நிர்மாண பணிகளை முன்னெடுத்துள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை வேறு எந்த தரப்பினருக்கும் வழங்கும் எண்ணம் இல்லையென அமைச்சர் அதன்போது ஜப்பான் தூதுவரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.