Country | Buying | Selling | |
![]() ![]() | Dollar | 198.50 | 202.99 |
USA | |||
![]() ![]() | Pound | 273.27 | 282.08 |
UK | |||
![]() ![]() | Euro | 233.75 | 242.34 |
EU | |||
![]() ![]() | Yen | 1.79 | 1.86 |
Japan | |||
![]() ![]() | Yuan | 30.23 | 31.50 |
China | |||
![]() ![]() | Dollar | 144.54 | 150.86 |
Australia |
வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு..
Related Articles
கொள்கை ரீதியான வட்டி வீதத்தை தொடர்ந்தும் நிலையாக பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் நிலையான வைப்புக்களுக்கான வட்டி வீதம் நூற்றுக்கு 14.5 வீதமாக தொடர்ந்தும் காணப்படுவதாகவும், அத்தோடு கடன்களுக்கான வட்டி வீதம் 15.5 வீதமாக பேணுவதற்கும் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
கடந்த ஒருசில மாதங்களில் எதிர்ப்பார்க்கப்பட்ட பணவீக்கம் குறைவடைந்து வருவதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு நுகர்வோர் குறிக்காட்டி மற்றும் தேசிய நுகர்வோர் சுட்டி என்பவற்றின் அடிப்படையில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாகவும் பணவீக்கம் குறைவடைந்துள்ளது.
2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகைளில், 2023ம் ஆண்டின் இறுதியில் தேசிய பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டுசெல்ல முடியுமென மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. சரியான பொருளாதார கொள்கைகளை சமயோசிதமாக பயன்படுத்துவதனூடாக பொருளாதார நடைமுறைகளை வழமைக்கு கொண்டுவர முடியுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முதலீட்டு அதிகரிப்பை அடுத்து அந்நிய செலாவணி கையிருப்பில் அதிகரிப்பு ஏற்படுமெனவும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.