உலகின் மதிப்பு மிக்க நிறுவனமான ஆப்பிளை பின் தள்ளி அமேசன் தெரிவு
Related Articles
உலகின் மதிப்பு மிக்க நிறுவனமான அமேசன் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான பாரிய நிறுவனங்களை மதிப்பாய்வு செய்து வெளியிடப்படும் க்ளோபல் 500 அறிக்கைக்கமைய அமேசன் நிறுவனம் முதல் இடத்தை பெற்றுள்ளது. அப்பள் நிறுவனத்தை பின் தள்ளி அமேசன் முதல் இடத்தை பிடித்துள்ளமை உறுப்படுத்தப்பட்டுள்ளது. அப்பள் நிறுவனத்தின் மதிப்பு 16 சதவீதம் குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணமாகும். அப்பள் நிறுவனத்தின் விநியோக சங்கிலி சீர்குழைந்துள்ளமை மற்றும் தட்டுப்பாடு, தொழில் சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களினால் மதிப்பு குறைவடைந்துள்ளதாக க்ளோபல் 500 அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கூகுல் நிறுவனம் 3ம் இடத்தையும், மைக்ரோசொப்ட் நிறுவுனம் 4வது இடத்தையும், வால்மார்ட் நிறுவனம் 5வது இடத்தையும், பிடித்துள்ளன.
சம்சுங் நிறுவனம் 6வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சர்வதேச தரப்பட்டியலில் முதல் 100 இடங்களில் இந்தியாவை சேர்ந்த பாரம்பரியமான டாடா நிறுவனம்இடம்பெற்றுள்ளது. கடந்த வருடம் 78வது இடத்தில் காணப்பட்ட டாடா நிறுவனம் 69வது இடத்திற்கு முன்னேறியுள்ளமை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.