பாதிக்கப்பட்ட மற்றும் சாட்சிகளை பாதுகாக்க விசேட தினம் பிரகடனம்..
Related Articles
குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு வழங்குவதற்கான தினமாக மார்ச் 7ம் திகதியை பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாப்பதற்கு தேசிய அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் குற்றங்களினால் பாதிக்கப்படும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு அவர்களை பாதுகாப்பது தொடர்பில் சமூகத்தை தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை நோக்காக கொண்டு அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை உணர்த்தும் வகையில் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.