கண்டி முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவிற்கு எதிரான வழக்கின் பாதுகாப்பு சாட்சிகளை அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அத்துருகிரிய மிலேனியம் சிட்டி வீட்டு தொகுதியில் முன்னெடுத்துச்சென்ற இராணுவ புலனாய்வு பிரிவின் பாதுகாப்பு இல்லத்தை சுற்றிவளைத்து, அங்குள்ள அதிகாரிகளை கைதுசெய்ததன் ஊடாக அரச இரகசியங்களை வெளிப்படுத்தியதாக குலசிறி உடும்பொலவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு சாட்சிகளை அழைக்காது பிரதிவாதியை விடுதலை செய்வதா? இல்லையா? என்பது குறித்த தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்படவிருந்தது. எனினும் சாட்சியை அழைப்பிக்க வேண்டியது அவசியமென நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இதற்கமைய குறித்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மிலேனியம் சிட்டி பாதுகாப்பு இல்லம் கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி சுற்றிவளைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குலசிறி உடுகம்பொலவிற்கு எதிரான வழக்கின் பாதுகாப்பு சாட்சிகளை அழைக்க நீதிமன்றம் தீர்மானம்..
படிக்க 1 நிமிடங்கள்