ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கைது..
Related Articles
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அவரை கைதுசெய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 501 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 56 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட 95 ஆயிரம் ரூபாவிற்கும் அதிக பணம், இலத்திரனியல் தராசு என்பன மற்றும் கையடக்க தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.