Country | Buying | Selling | |
![]() ![]() | Dollar | 198.50 | 202.99 |
USA | |||
![]() ![]() | Pound | 273.27 | 282.08 |
UK | |||
![]() ![]() | Euro | 233.75 | 242.34 |
EU | |||
![]() ![]() | Yen | 1.79 | 1.86 |
Japan | |||
![]() ![]() | Yuan | 30.23 | 31.50 |
China | |||
![]() ![]() | Dollar | 144.54 | 150.86 |
Australia |
முட்டை விலை தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை
Related Articles
முட்டை விலை தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் இம்பெறவுள்ளது. முட்டை வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர்.
முட்டை விலை துரிதமாக அதிகரித்ததையடுத்து கட்டுப்பாட்டு விலை ஒன்றை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வெள்ளை முட்டை 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டை 46 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான முட்டை வர்த்தகர்கள் குறித்த கட்டுப்பாட்டு விலையில் முட்டையை விற்பனை செய்ய முடியாதெனவும் அவ்வாறு விற்பனை செய்யும் பட்சத்தில் தமக்கு நட்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் கூடுதல் விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் குறித்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்துள்ளது. கூடுதல் விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கவும் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் முட்டை விலை தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.