நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக முன்னர் ஜனாதிபதி தெரிவிப்பு
Related Articles
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக முன்னர் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தில் தான் நாட்டில் இருக்கவில்லை. தாக்குதல் தொடர்பான தகவல்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்றிருந்தது. எனினும் அவர்களிடமிருந்து தனக்கு எந்தவொரு தகவல்களும் வழங்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார். தனக்கு குறித்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டிருந்தால் அத்தகையதொரு சம்பவம் இடம்பெற அனுமதித்திருக்க மாட்டேன் என அவர் குறிப்பிட்டார்.
செப்டம்பர் 11 அமெரிக்காவின் பெண்டகன் தாக்குதல் சம்பவத்தின் போது 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஒரு வாரத்திற்கு முன்னர் அவர்களுக்கு தாக்குதல் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றிருந்த போதும் தாக்குதலை அவர்களால் முறியடிக்க முடியாமல் போனது. குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை உருவாக்கியிருந்தார். குறித்த தாக்குதல் தொடர்பில் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பை சேர்ந்த எந்தவொரு அதிகாரிக்கும் தண்டனை வழங்கப்படக்கூடாதென குறித்த ஆணைக்குழு இறுதியாக அறிக்கை வழங்கியிருந்தது. அவ்வாறு தண்டனை வழங்கினால் ஏனைய அதிகாரிகள் முறையாக பணிகளை மேற்கொள்ளமாட்டார்கள் என்பதை அவர்கள் அதற்கான காரணமாக அறிவித்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.