உலகில் இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட மிகப்பெரிய தேரை என கருதப்படும் உயிரினம் ஒன்று அவுஸ்திரேலியாவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சாதாரண தேரையை விடவும், ஆறு மடங்கு பெரிய அளவிலான குறித்த உயிரிணத்திற்கு மெடியா டொட்சிலா என பெயரிடப்பட்டுள்ளது.
வடக்கு அவுஸ்திரேலியாவின் வனப்பகுதியில் 2.7 கிலோ கிராம் எடைக்கொண்டதாக குறித்த தேரை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதன் வயது சுமார் 15 வருடங்களென அணுமாணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 1991ம் ஆண்டு சுவிடனில் கண்டுப்பிடிக்கப்பட்ட தேரை ஒன்றே மிகப்பெரிய தேரையாக கின்னஸ் உலக சாதணை புத்தகத்தில் பதியப்பட்டது. அதன் எடை 2.65 கிலோ கிராம் ஆகும்.