பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை..
Related Articles
நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அணுசரணையுடன் செயற்படும் சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்படுகிறது. 2022 பாடசாலை கல்வி ஆண்டின் 3ம் தவணை கல்வி நடவடிக்கையின் 2ம் கட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. 3ம் தவணையின் இறுதி கட்ட நடவடிக்கைக்கென பாடசாலைகள் பெப்ரவரி மாதம் 20ம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. உயர்தரப்பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் தயாராகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதம் 17ம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. பரீட்சையின் போது இலத்திரணியல் சாதனங்களை கொண்டுச்செல்லவும், வைத்திருக்கவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் பரீட்சார்த்திகள் 5 ஆண்டுகளுக்கு உயர்தர பரீட்சைக்கு தோற்ற தடை விதிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.