கலவரத்தை அடக்காத ராணுவ வீரர்கள் பணி நீக்கம்
Related Articles
பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் Bolsonaro தோல்வியடைந்த நிலையில் . முன்னாள் அதிபர் Luiz Inácio Lula da Silva வெற்றி பெற்று, புதிய அதிபராக பொறுப்பேற்றார். இதற்கிடையே, வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகை, உச்ச நீதிமன்ற வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அவரது ஆதரவாளர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். அதிபர் இல்லத்திலும் கலவரம் பரவியது. இந்தப் போராட்டத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், பிரேசில் அதிபர் மாளிகை கலவரம் தொடர்பான ஆர்பாட்டக்காரர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க தவறிய 40 ராணுவ வீரர்களை பணிநீக்கம் செய்ய அந்நாட்டு அதிபர் Luiz உத்தரவிட்டுள்ளார்.