குரங்குகள் மற்றும் மர அணில்களால் கடந்த வருடம் 180 முதல் 200 மில்லியன் தேங்காய்கள் நாசம்..
Related Articles
குரங்குகள் மற்றும் மர அணில்களால் கடந்த வருடம் 180 முதல் 200 மில்லியன் தேங்காய்கள் நாசமாக்கப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது. இலங்கை விவசாயிகளுக்கும், வனவிலங்குகளுக்குமிடையிலான மோதல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் மாத்திரம் குரங்குகள் மற்றும் மர அணில்களால் 93 மில்லியன் தேங்காய்கள் நாசமாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மர அணில்களால் 180 கமநல அபிவிருத்தி பிரிவுகளில் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குரங்குகள் 200 கமநல அபிவிருத்தி பிரிவுகளில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. 21 மாவட்டங்களுக்கும் உட்பட்ட 57 ஆயிரத்து 815 ஹெக்டெயர் தெங்கு பயிர்ச்செய்கை நாசமடைந்துள்ளது. இது மொத்த பயிர்ச்செய்கையில் 21 வீதமாகுமென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை விலங்குகளால் பயிர்ச்செய்கைக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.