ஜனாதிபதிக்கும், கட்சி தலைவர்களுக்குமிடையில் இன்று விசேட சந்திப்பு.
Related Articles
ஜனாதிபதி பிரதமர் தலைமையில் கட்சி தலைவர்களின் விசேட கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்றைய தினம் பிற்பகல் 01.00 மணிக்கு நடைபெறவிருந்த பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார்.
இதன்போது எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்ல ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்தார். கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது இன்று பிற்பகல் 01.00 மணிக்கு வணிக குழு கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதை ஏன் நீங்கள் ரத்து செய்தீர்கள் என லக்ஷ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார். தேர்தல் செலவுகள் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாட இன்று பிற்பகல் 02.30 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு வருகைத்தருமாறு எமக்கு அழைப்பு கிடைத்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. எனினும் பாராளுமன்ற அலுவல்களை சபாநாயகரே தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதியால் அதை தீர்மானிக்க முடியாதென லக்ஷ்மன் கிரியல்ல வாதிட்டார்.
அறிக்கையை முழுமையாக வாசித்ததன் பின்னர் கருத்து வெளியிடுமாறு சபாநாயகர், லக்ஷ்மன் கிரியல்லவுக்கு குறிப்பிட்டார். தேர்தல் செலவுகள் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று பிற்பகல் 02.30 மணிக்கு கட்சி தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெறும். தனது தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் பங்கேற்பர் என சபாநாயகர் அறிவித்தார்.