உறக்கத்தில் இருந்த பேரனை அடித்துக்கொலை செய்த தாத்தா..
Related Articles
உறக்கத்தில் இருந்த பேரனை அவனது தாத்தா அடித்துக்கொலை செய்த சம்பவம் கொட்டவெஹர பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் 18 வயதான நவோத் டில்ஷான் எனப்படும் இளைஞனே உயிரிழந்துள்ளார். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவரது பாட்டன் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதேவேளை சந்தேக நபரை கைதுசெய்வதற்காக பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொட்டவெஹர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.