fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாதென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2023 12:39

மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாதென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

அமைச்சரவை அனுமதி வழங்கிய உத்தேச மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்த முடியாதென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவையின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இலங்கை மின்சார சபையினால் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளமை தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோர பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று முதல் மூன்று வாரங்களுக்கு பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படும். எவருக்கும் கருத்துக்களை பதிவுசெய்ய முடியும். பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலமாகவோ அல்லது ஆணைக்குழுவின் இணையத்தனத்தின் ஊடாகவோ கருத்துக்களை முன்வைக்கலாம். பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் பக்கத்திலும் பொதுமக்கள் மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தமது கருத்துக்களை பதிவுசெய்யலாம்;. இதேவேளை 0112 392 607 அல்லது 0112 392 608 ஆகிய இலக்கங்களினூடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2023 12:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க