குளிர்சாதனப்பெட்டிக்குள் சேர்பியா.. (Photos)
Related Articles
சேர்பியாவில் வரலாறு காணாத குளிர் பதிவாகியுள்ளது. யக்குட்டிஸ்க் நகரில் மறை 50 பாகை செல்சியஸாக குளிர் வானிலை பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலகில் அதிகளவான குளிர் வானிலை பதிவாகும் நகராக யக்குட்டிஸ்க் நகரம் கருதப்படுகிறது. அங்கு வழமையாக வெப்பநிலை மறை 8 பாகை செல்சியஸில் பதிவாகும். இம்முறை குளிர்காலத்தில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக யக்குட்டிஸ்க் நகரின் வெப்பநிலை மறை 64.6 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளது. குறித்த வானிலை முகங்கொடுக்கும் வகையில் நகர் மக்கள் தமது வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். நகரிலுள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள் குளிர்சாதனப்பெட்டிகளை பயன்படுத்தாது இறைச்சியை வெளியிடத்தில் வைத்து விற்பனை செய்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.