QR குறியீட்டை மீறிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறிவைப்பு..
Related Articles
QR முறையை மீறி செயற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாட்டை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கொள்வனவு மற்றும் விநியோகம் தொடர்பான மீளாய்வு குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போதே QR முறையை மீறி செயற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை மின்சார சபையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கவேண்டிய 105 பில்லியன் ரூபாவை அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.