பொரல்லை தனியார் வைத்தியசாலை சிறுநீரக கடத்தலில் பிரதான தரகர் உட்பட மூவர் கைது..
Related Articles
பொரல்லை தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக கடத்தலில் பிரதான தரகராக செயற்பட்ட நபர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களை பணம் தருவதாக ஏமாற்றி, சிறுநீரக மோசடியில் ஈடுபட்டவர்களே கைதுசெய்யப்பட்டதாக பொரல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோசடியின் பிரதான தரகர் கொழும்பு – 13 பிரதேசத்தை சேர்ந்தவரெனவும், அவர் நேற்று பிற்பகல் ஆமர்வீதி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுநீரக கடத்தற்காரர்களுக்கு போலி சான்றிதழ்களை வழங்கி உதவிய இரு கிராம சேவகர்களும் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொலன்னாவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர்களே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் ராஜகிரிய மற்றும் கடுவலை பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இதேவேளை சிறுநீரக மோசடி தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.