விபத்துக்குள்ளான நேபாள விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுப்பு
Related Articles
விபத்துக்குள்ளான நேபாள விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கறுப்பு பெட்டியிலுள்ள தடயங்களை ஆராயும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விமானிகளுக்கும், விமான கட்டுப்பாட்டறைக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் கறுப்பு பெட்டியில் ஒலிப்பதிவாகியுள்ளன. அவை ஆராயப்படும். விமானத்தின் என்ஜின் சத்தம் உட்பட சகல தகவல்களும் கறுப்பு பெட்டியில் பதிவாகியுள்ளன. இதனால் விபத்துக்கான உரிய காரணத்தை கண்டுப்பிடிக்க முடியுமென துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.