அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானம்
Related Articles
அரச ஊழியர்களின் சம்பளத்தை இரு தினங்களில் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிறைவேற்று தரத்தில் இல்லாத அரச ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் தினத்திலேயே முழு சம்பளமும் வழங்கப்படும் நிறைவேற்று தரமுடைய அதிகாரிகளின் சம்பளத்தை சில தினங்களின் பின்னர் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2023ம் ஆண்டில் அரசாங்கம் புதிய வருமான திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதனூடாக வருமானத்தை பெற சிறிது காலஅவகாசம் தேவைப்படும். இவ்வாறான சூழலில் அரசாங்கம் நிதியை முகாமைத்துவப்படுத்த திட்டமிட்டுள்ளது. இம்மாதம் முதல் எதிர்வரும் சில மாதங்களுக்கு அரச செலவு முகாமைத்துவம் செய்யப்படும்.
இதற்கமையவே நிறைவேற்று தரமுடைய அரச ஊழியர்களின் சம்பளத்தை சில நாட்களின் பின்னரும், ஏனைய அரச ஊழியர்களின் சம்பளத்தை தற்போது வழங்கப்படும் அதே தினத்திலும் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.