மேலதிக வகுப்புக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை..
Related Articles
இன்று நள்ளிரவு முதல் உயர்தர பரீட்சையை முன்னிட்டு வகுப்புகளை நடத்துதல், கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல், கையேடுகளை விநியோகித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் சட்டத்திற்கமைய 6 நாட்களுக்கு முன்னர் தனியார் வகுப்புகளை நடத்துதல் உள்ளிட்ட பரீட்சையுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இம்முறை இரண்டாயிரத்து 200 பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தர பரீட்சை நடைபெறவுள்ளது. 3 இலட்சத்து 31 ஆயிரத்து 709 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதேவேளை பரீட்சை அனுமதிப்பத்திரத்தில் குளறுபடிகள் காணப்படின் அவற்றை சீர்செய்துகொள்ள நாளைய தினம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒன்லைன் முறை மூலமும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.