தண்டப்பணம் மூலமாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கடந்த வருடம் 70 இலட்சம் ரூபா வருமானம்..
Related Articles
வனஜீவராசிகள் திணைக்களம் கடந்த வருடம் 70 இலட்சம் ரூபாவை தண்டப்பணம் மூலம் வருமானமாக ஈட்டியுள்ளது. பல்வேறு நபர்கள் வனம் மற்றும் வனஜீவராசிகளுக்கு ஏற்படுத்திய பாதிப்புக்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மூலமே தண்டப்பணம் கிடைத்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் வரை வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிடத்தக்களவு வருமானத்தை ஈட்டியிருந்தது. அதில் பெருந்தொகை உரிம கட்டணத்தினூடாக ஈட்டப்பட்டது. இதேவேளை யால, வில்பத்து மற்றும் வஸ்கமுவ சரணாலயங்களை சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.