சுதந்திர மக்கள் கூட்டணியின் விசேட நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் கூட்டம் நடைபெறும். உத்தர லங்கா சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட 12 கட்சிகள் இணைந்து கூட்டணியை உருவாக்கியுள்ளன. எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடவும் கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதற்கமைய இன்று நடைபெறவுள்ள நிறைவேற்றுக்குழு கூட்டத்தின்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தொடர்பில் கட்சிகளுக்கிடையில் இறுதி இணப்பாடு எட்டப்படவுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கூட்டணியிலிருந்து விலகவுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் தனித்து போட்டியிட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கட்சி உள்மட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.