தலவாக்கலை மிடில்டன் தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் முற்றாக சேதம்..
Related Articles
தலவாக்கலை மிடில்டன் தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் முழுமையாக நாசமடைந்துள்ளன. நேற்று இரவு தீ விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் அதிஷ்டவசமாக எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடொன்றில் ஏற்பட்ட தீ ஏனைய வீடுகளுக்கும் பரவியுள்ளது. விபத்தையடுத்து 12 வீடுகளையும் சேர்ந்த 47 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மின் கசிவினால் விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.